நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ சுமார் 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளியன்று வெளியாக உள்ள படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லையாம். மேலும், விலங்குகள் நலவாரியமும் படத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பல பிரச்சினைகளை கடந்து வந்திருக்கும் ‘மெர்சல்’, தீபாவளிக்கு நிச்சயம் ரிலீஸ் செய்வோம், என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறி வந்தாலும், விலங்குகள் நல வாரியத்தின் நடவடிக்கையால் படம் ரிலிஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று சென்னை க்ரீன்வெஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, முதல்வருடன் இருந்த சில அமைச்சர்கள், நடிகர்கள் தமிழக அரசியலை தொடர்ந்து விமர்சன் செய்து வருவதை நிறுத்துங்கள். பிரச்சினை என்றால் மட்டும் எங்களிடம் வரும் நீங்கள், எங்களையே அவமானப்படுத்தும் வகையில் விமர்சன் செய்யலாமா? என்று விஜயிடம் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த சந்திப்பு குறித்து விஜய் தரப்பிலோ அல்லது தமிழக அரசு தரப்பிலோ இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...