இந்தியாவையே தன் ’கதர் 2’ படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ளார். இவரது அடுத்த படம், மிகப்பெரும் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. நவீன் யெர்னேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஒய்.ரவிசங்கர் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி.விஸ்வ பிரசாத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாகத் தயாரிக்க, பிளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இப்படத்தை இயக்குகிறார்.
கிராக் மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் கோபிசந்த் மலினேனி, இப்படத்தை முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாக்கவுள்ளார். இது அவரது முதல் இந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கண்டிராத ஆக்ஷன் அவதாரத்தில் ஹீரோ சன்னி தியோலை இப்படத்தில் காட்சிப்படுத்தவுள்ளார். தென்னிந்திய இயக்குநருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் மீது, வடநாட்டுப் பார்வையாளர்கள் சிறப்பு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்பொழுதே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகிய இரண்டு நிறுவனங்கள் பெரிய நட்சத்திரங்களை வைத்து அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்றவை. இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் மிகச் சரியான இயக்குநர் இணையும் இந்த பாலிவுட் #SDGM படம் சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் அட்டகாசமான படைப்பாக உருவாகவுள்ளது.
இப்படத்தில் சயாமி கெர் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மிகப் பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய, தமன்.எஸ்இசையமைக்கிறார். நவின் நூலி படத்தொகுப்பாளராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
திரைத்துறை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள இப்படத்தின் துவக்க விழா ஐதராபாத்தில் பூஜையுடன் நடைபெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு வரும் ஜூன் 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’...
Director Parameshwar Hivrale is bringing to the screen the life story of Gummadi Narsaiah- the CPI former MLA from Illandu, known as a champion of the poor and famously known for riding a bicycle to the Assembly...
அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’...