’சித்தா’ என்கிற உணர்வுப்பூர்மான கதையம்சம் கொண்ட வெற்றிப் படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த் நடிக்கும் படத்திற்கு ‘மிஸ் யூ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் சித்தார்துக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் மின்னணி நடிகையாக வலம் வரும் இவர், இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இவரக்ளுடன் கருணாகரன், லொள்ளு சபா மாறன், பாலசரவணன், பொன்வண்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய ஹிட் படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்ய, மோகன்ராஜன் பாடல்கள் எழுதுகிறார்.
படம் பற்றி இயக்குநர் என்.ராஜசேகர் கூறுகையில், “ஆண்-பெண் நட்பு, அன்பு, காதலை பற்றி சினிமாவில் சொல்வதற்கு இன்னும் தீராத அளவிற்கு விஷயங்கள் இருக்கிறது. காதல் வரும்போது அழகாக மாறும் நம் உலகம், அதன் தோல்வியை பார்க்கும்போது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். அப்படி ஒரு லவ் பிரேக்கப்பிற்கு பிறகு பிடிக்காமல் போய்விட்ட பெண்ணோடு ஒரு சாமானிய இளைஞனுக்கு வரும் காதல் தான் இந்தப்படத்தின் கதை.
மீண்டும் ஒரு நிஜமான காதல் படத்திற்காக சினிமா விரும்பிகள் காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சித்தார்த், இந்தக்கதையை கேட்டதும் உடனே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். நாயகி சுப்புலட்சுமியாக கன்னட, தெலுங்கு திரையுலகில் பிரபலமான ஆஷிகா ரங்கநாத் தமிழில் அறிமுகமாகிம் இவரை ’மிஸ் யூ’ படம் வெளியான பிறகு பெண்களே லவ் யூ என சொல்லும் விதமாக ரசிகர்களை கவருவார்.” என்றார்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...