சுந்தர்.சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா ஆகியோரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ திரைப்படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் படம் என்ற பெருமையோடு, ரூ.100 கோடி வசூல் தாண்டிய படம் என்ற பெருமையையும் பெற்றது.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தோடு இப்படத்தை மக்கள் பார்த்ததோடு, அனைத்து திரையரங்குகளும் திருவிழா போன்று மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. அனைத்து தரப்பு மக்களையும் திரையரங்கிற்கு வர வைத்த ‘அரண்மனை 4’ தற்போது மக்களை தங்களது இல்லங்களில் கொண்டாட வைக்கப் போகிறது. ஆம், ‘அரண்மனை 4’ திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ‘அரண்மனை 4’ திரைப்படம் தமிழ் மட்டும் இன்றி பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தில், ரசிகர்களை ஒரு புதுமையான ஹாரர் பயணத்திற்கு அழைத்து சென்ற இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை குவித்து, திரையரங்குகளில் ப்ளாக்பஸ்டர் பெற்றது.
அசாமிய நாட்டுப்புறக் கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு ஆவியை அடிப்படையாகக் கொண்டு அரண்மனை 4 படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பாக் எனப்படும் நீர் ஆவியைப் பற்றியது, இது தண்ணீரில் வசிக்கும் மற்றும் அது தொடர்பு கொள்ளும் எந்த மனிதனின் வடிவத்தையும் எடுக்க முடியும். திரில்லர் மற்றும் ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க, E கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு எடிட்டிங் பணிகளை ஃபெனி ஆலிவர் மற்றும் சண்டைக்காட்சிகளை ராஜசேகர் செய்துள்ளார்.
சுந்த சி உடைய வழக்கமான கமர்ஷியல் அம்சங்களுடன், குடும்பத்தோடு பார்த்து மகிழும் இந்த ஹாரர் காமெடித் திரைப்படத்தை தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளிக்கலாம்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...