எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’. இதில், பிரபு தேவாவுக்கு ஜோடியாக வேதிகா மற்றும் சன்னி லியோன் நடித்திருக்கிறார்கள். இதன் மூலம் முதல் முறையாக சன்னி லியோனுடன் பிரபு தேவா கைகோர்த்துள்ளார். இவர்களுடன் ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
பி.கே.தினில் கதை எழுதியிருக்கும் இந்த படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசையமைக்க, ஏ.ஆர்.மோகன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்கிறார். பொழுதுபோக்கு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல் கம்யூனிகேஷன் நிறுவனங்கள் சார்பில் ஜோபி பி.சாம் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டார். இந்த டீசரில் நடனப்புயல் பிரபுதேவாவின் அசத்தலான நடனமும் , ஆக்சன் காட்சிகளும், வேதிகாவின் வித்தியாசமான தோற்றமும்.. ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...