Latest News :

விஜய்க்கு எதிராக சதி செய்யும் வெளிநாட்டு நிறுவனம்!
Sunday October-15 2017

விஜயின் ‘மெர்சல்’ தீபாவளிக்கு நிச்சயம் வெளியாகும் என்ற நிலை மாறி, ”வெளியாகும் ஆனா ஆகாது”, என்ற நிலைக்கு வந்துள்ளது.

 

உள்ளூர் பிரச்சினைகளை ஊதி தள்ளிய விஜய், தற்போது வெளிநாட்டு நிறுவனமான பீட்டாவின் சதியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

 

‘மெர்சல்’ படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, அது கிராபிக்ஸ் என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை, என்ற பிரச்சினையை வெளிநாட்டு நிறுவனமான பீட்டா கையில் எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தூண்டுதலின் பேரிலேயே ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக விலங்குகள் நலவாரியம் பிரச்சினையை எழுப்பியுள்ளது.

 

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விஜய் பங்கேற்றதுடன், பீட்டாவுக்கு எதிராகவும் பேசினார். இதை மனதில் வைத்தே பீட்டா விஜய் படத்திற்கு எதிராக சதி செய்வதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை சமாளிக்க விஜய் இன்று முதல்வரை சந்தித்தாலும், இது மத்திய அரசு விவகாரம் என்பதால், நாளைக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், ‘மெர்சல்’ வெளியாவது கஷ்ட்டமே என்று கூறப்படுகிறது.

Related News

985

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery