கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது.
இந்தியா முழுவதும் படத்திற்கான விளம்பர பணிகளை மேற்கொண்டுள்ள லைகா நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு பணிகளையும் பிரமாண்டமாகவும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலும் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், சென்னையில் டிரைலர் வெளியீட்டு விழாவை நடத்தியதோடு, மும்பையிலும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியை நடத்தியது. மேலும், நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 கி.பி’ படத்துடன் ‘இந்தியன் 2’ படத்தின் டிரைலரையும் வெளியிட்டு அசத்தியுள்ளது.
இந்த ஆண்டில் இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய திரைப்படங்களில் ஒன்றான ’கல்கி 2898 கிபி’ படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்துடன் ’இந்தியன் 2’ படத்தின் டிரைலர் வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. மேலும் திரையரங்குகளில் டிரைலரை பார்த்த ரசிகர்கள், அமோக வரவேற்பு கொடுத்து, கொண்டாடி வருகின்றனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...