Latest News :

வெளியானது ‘விடாமுயற்சி’ முதல் பார்வை! - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்
Monday July-01 2024

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், அஜித் குமார் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள். காரணம், படத்தின் முதல் பார்வை வெளியாகியிருப்பது தான்.

 

'மங்காத்தா' படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் - த்ரிஷா - ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மூவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில்  இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

சமீபத்தில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படம் பற்றி லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் கூறுகையில், “எங்கள் சிறப்பு தயாரிப்புகளில் ஒன்றான ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது முதல் ரசிகர்கள் இந்த படத்தின் மீது தங்கள் அன்பையும் ஆதரவையும் பெருமளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டிருக்கிறோம். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் படப்பிடிப்பு முடிவடையும். ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.” என்றார்.

 

Vidamuyarchi

 

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். மிலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுப்ரீம் சுந்தர் (ஸ்டண்ட்ஸ்), அனு வர்தன் (ஆடைகள்), சுப்ரமணியன் நாராயணன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), ஜே. கிரிநாதன் & கே ஜெயசீலன் (தயாரிப்பு நிர்வாகி), ஜி ஆனந்த் குமார் (ஸ்டில்ஸ்), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைனர்), ஹரிஹரசுதன் (விஎஃப்எக்ஸ்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு), மற்றும் ஜிகேஎம் தமிழ் குமரன் (லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

 

விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சியும், ஒடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

9859

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery