நடிகை நமிதா, மூத்த நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும், உடல் எடை அதிகரிப்பால் போதிய வாய்ப்புகள் இன்றி இருந்த நமீதா, உடல் எடையை குறைத்தும் சினிமா வாய்ப்புகளை பெற முடியாமல் தவிக்கிறார்.
இதனால், கடை திறப்பு, கலை நிகழ்ச்சி என்று தனது கலை வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அவரால் ரசிகர்களை கவர முடியாததால், நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், நடிகை நமீதாவுக்கும் மூத்த நடிகர் சரத்பாபுவிற்கும் திருமணம் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தி குறித்து நமீதா தரப்பில் எந்தவித விளக்கும் அளிக்கப்படவில்லை. அதே சமயம், இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் சரத்பாபு, ”8 வருடங்களுக்கு முன்பாக நான் நமீதாவுடன் ஒரு படத்தில் நடித்தேன். அன்று முதலே இதுபோன்ற வதந்திகள் வெளியாக தொடங்கிவிட்டது. இதுபோன்ற வதந்திகளால் என் பெயருக்கு கலங்கும் ஏற்படுகிறது.” என்று கூறியுள்ளார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...