Latest News :

தன்வீர் தயானந்த ஜெயந்தி 2024 விழாவில் கலந்துக் கொண்ட திரை பிரபலங்கள்!
Wednesday July-03 2024

தன்வீர் தயானந்த கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை (Dhanveer Dayananda Educational and Charitable Trust) 2024 ஆம் ஆண்டுக்கான ’தன்வீர் தயானந்த ஜெயந்தி’ விழாவை ஜூலை 2 ஆம் தேதி சென்னையில் கொண்டாடியது.

 

தன்வீர் தயானந்த ஜெயந்தி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவரானா புனிதர் தன்வீர் தயானந்த யோகி ஜியின் பிறந்தநாளான ’தன்வீர் தயானந்த ஜெயந்தி’ விழாவில் ஆடியோ வடிவிலான ’திருவாசகம்’ மற்றும் ‘தெய்வீக அற்புதங்கள் மற்றும் ரகசியங்கள்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

 

இந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் விமல், வையாபுரி, நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா, ஆன்மீக பேச்சாளர் சோசோ மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள். 

மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வாகனங்கள் மூலம் அன்னதானமும் வழங்கப்பட்டது. 

 

பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தன்வீர் தயானந்த கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு தொண்டு பணிகளை செய்து வருகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, பல்வேறு கோவில்களின் பராமரிப்பு மற்றும் கோவில் விழாக்களுக்கான உதவி, கலாச்சார போதனைகள், யோகா மற்றும் தியான நுற்பங்கள் கற்பித்தல், சித்த மருந்துகள், வர்ம சிகிச்சை, ஜாதகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை சமுதாயத்திற்கு கற்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9862

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery