டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல் ஸ்டுடியோஸ் பகிர்ந்து கொள்கிறது!
சமீபத்திய புரோமோ, இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஆக்ஷன் அதிரடி சண்டையை ரசிகர்களுக்குக் காட்டியுள்ளது. சூப்பர் வில்லன் சப்ரெடூத் மீண்டும் வால்வரினை எதிர்கொள்ளும்படி இந்த ஆக்ஷன் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. டெட்பூல் கூறியது போல், நாங்களும் மிகப்பெரிய ரசிகர்கள்! புரோமோவை விட பல மடங்கு பிரம்மாண்டமாக நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மார்வெல் ஸ்டுடியோஸின் 'டெட்பூல் & வால்வரின்' ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...