Latest News :

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘செளகிதார்’ தொடங்கியது!
Friday July-05 2024

நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் கிளாப் அடிக்க, நடிகர் சாய்குமார் ஒளிப்பதிவு செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

 

'ரதவரா' படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா 'சௌகிதார்' படத்தினை இயக்குகிறார்.  'டயலாக் கிங்' என்று அழைக்கப்படும் சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தொட்மனே குடி தன்யாராம் குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து படக்குழு படத்தை அறிமுகம் செய்யும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது.

 

படம் குறித்து இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூறுகையில், ”பல மொழிகளில் வெளியாகும் எனது ஆறாவது படம் இதுவாகும். கல்லஹள்ளி சந்திரசேகர் ஒரு நல்ல படைப்பை உருவாக்கும் எண்ணத்தில், ரசவாதா படத்தின் வெற்றிக்குப் பிறகு, என்னை அணுகினார்.  இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிருத்வி நடிக்கிறார். நான் இந்த முறை ஒரு வித்தியாசமான கதையை சொல்ல விரும்பினேன், பிருத்வி அவர் பாத்திரத்திற்காக விரிவாகத் தயாராகி வருகிறார், மேலும் படம் குறித்த அவரது உற்சாகத்தை காண்கையில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.  சாய்குமார் சார், மற்றும் தர்மா சார் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் சச்சின் பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.” என்றார்.

 

நடிகர் பிருத்வி அம்பர் கூறுகையில், “இன்று மகிழ்ச்சியான நாள்.  "சௌகிதார் திரைப்படம் எனது தாயின் ஆசியுடன் இனிதே தொடங்கியது. கதையை முதலில் கேட்டபோதே, இந்த கதாபாத்திரத்திற்காக நான் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், இப்படத்திற்கு தயாராக நேரம் கேட்டேன். இப்பட டீசரை ஒரே நாளில் படமாக்கினோம், தலைப்புக்கேற்றவாறே ஒரு அட்டகாசமான அனுபவமாக, உங்களைத் திருப்தி செய்யும் படமாக இருக்கும்.” என்றார்.

 

சாய்குமார் கூறுகையில், ”நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்த ஆண்டு நடிகராக 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனது அப்பா, அம்மாவுக்கு நன்றி. நான் கன்னட படங்களில் நடிக்க வேண்டும் என்று என் அம்மா விரும்பினார். எனது கன்னட பயணமும் 30 வருடங்களை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்பட வேடமும், ஒரு சவாலாகவே உள்ளது. தற்போது, பதினைந்து திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. "சௌகிதாரின் கதை ஒரு எமோஷனல் டிராமா. பிருத்வி ஹீரோவாக நடிக்கும் துளு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். இது ஒரு நல்ல சப்ஜெக்ட்". "பிரித்வி அம்பாருக்கும், இயக்குநருக்கும் நான் தான் சௌகிதார்.” என்றார்.

 

நடிகை தன்யா ராம் குமார் கூறுகையில், ”சௌகிதாரில் எனக்கு வாய்ப்பளித்த சந்திராசர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நடிகர்கள் தர்மா சார் மற்றும் சாய்குமார் சாருடன் பணியாற்றுவதில் நான்  பெருமை கொள்கிறேன்.” என்றார்.

 

வித்யாசேகர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில், கல்லஹள்ளி சந்திரசேகர்‘சௌகிதார்’ படத்தைத் தயாரிக்கிறார். நாகேந்திர பிரசாத் மற்றும் பிரமோத் மறவந்தே ஆகியோர்  பாடலை எழுத, சச்சின் பஸ்ரூரு இசையமைக்கிறார். 'சௌகிதார்' பல மொழிகளில் தயாராகிறது. இதுவரை தனது ரொமாண்டிக் ஹீரோவாக பெயர் பெற்ற ப்ரித்வி அம்பர், இப்போது இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் பார்வையாளர்களை கவர்வார், இது ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும்.  ‘சௌகிதார்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Related News

9869

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery