பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்த கமல் ‘இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து கமல் விலகியதாக தகவல் பரவி வருகிறது.
மேலும், கமலுக்கு பதில் சூர்யாவை நடிக்க வைக்க தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குநர் ஷங்கர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
கோடம்பாக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை கிளப்பியிருக்கும் இந்த தகவல் குறித்து விசாரிக்கையில், “இந்தியன் 2’வில் கமல் நடிக்கவிருப்பது உறுதி. ‘2.0’ படத்தின் பாடல் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் ‘இந்தியன் 2’வில் கவனம் செலுத்தவுள்ளார். மேலும், சூர்யா நடிப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை” என்று தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...