யோகி பாபு நாயகனாக நடிக்கும் ‘கான்ஸ்டபிள் நந்தன்’ படம் தொடங்கியது!
Monday July-08 2024

காமெடி வேடங்களில் நடித்து வந்தாலும், அவ்வபோது கதையின் நாயகனாகவும் தொடர்ந்து நடித்து வரும் யோகி பாபு, கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘கான்ஸ்டபிள் நந்தன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காமெடி வேடங்களில் காவலர் வேடத்தில் யோகி பாபு நடித்திருந்தாலும், கதையின் நாயகனாக நடிக்கும் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.

 

ஷங்கர் பிக்சர்ஸ் சார்பில் டி. ஷங்கர் திருவண்ணாமலை தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் சுந்தர் சி, சசிகுமார், மு. களஞ்சியம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பூபால நடேசன் இயக்குகிறார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் (ஜூலை 7) திருவண்ணாமலை கோவிலின் ஆன்மீக சூழலில் பூஜையுடன் தொடங்கியது.

 

தயாரிப்பாளர் டி. சங்கர் திருவண்ணாமலை கூறும்போது, “பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் யோகி பாபு போன்ற தலைசிறந்த நடிகருடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது. கதை சொல்லும் போது அவர் காட்டிய ஆர்வம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. திரையுலகில் உள்ள முக்கிய இயக்குநர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுத் தெளிந்துள்ள இயக்குநர் பூபால நடேசன் போன்ற திறமையான இயக்குநருடன் ’கான்ஸ்டபிள் நந்தன்’ படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து தயாரிக்க விரும்புகிறோம்” என்றார்.

 

இயக்குநர் பூபால நடேசன் பேசுகையில், “நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட  தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பது ஒரு வரப்பிரசாதம். அப்படியான சங்கர் சார் என் கதையைத் தயாரிக்க முன்வந்ததற்கு மகிழ்ச்சி. பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தின் விருப்பமான யோகி பாபு சார் போன்ற ஒரு தலைசிறந்த நடிகருடன் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. நகைச்சுவை நடிகராக அவரது வாழ்க்கை வெற்றியின் உச்சத்தைத் தொட்டபோது, அவர் தைரியமாக கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் கதாநாயகனாக நடித்தப் பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. ‘கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்படமும் அவரது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும். கதையில் யோகி பாபுவுக்கு எதிரான ஒரு வலுவான கதாபாத்திரம் இருக்கிறது. அதில் திறமையான நடிகர் ஒருவரை விரைவில் தேர்ந்தெடுத்து அறிவிப்போம்” என்றார்.

Related News

9873

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery