துல்கர் சல்மானின் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday July-11 2024

1980 களின் பிற்பகுதியிலிருந்து 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘லக்கி பாஸ்கர்’. வெங்கி அட்லூரி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார்.

 

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் செளஜன்யா இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இபப்டத்தை ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

 

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 7 அம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

80-களில் மும்பையை  (அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்டது) ஹைதராபாத்தில் சில விலையுயர்ந்த மற்றும் விரிவான செட்களுடன் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இந்தக் கதை நடக்கும் காலக்கட்டத்தை ஒத்த வங்கிகளை மிகப் பிரம்மாண்டமாக படக்குழு உருவாக்கியுள்ளது.

 

பெரிய அளவில் தரமான உள்ளடக்கத்தை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் 'லக்கி பாஸ்கர்' படத்திற்கும் பிரமாண்டமான செட்களை உருவாக்கத் தயங்கவில்லை. 'லக்கி பாஸ்க'ரின் வாழ்க்கை காலக்கட்டத்திற்கு பார்வையாளர்கள் நிச்சயம் கொண்டு செல்லப்படுவார்கள் எனத் தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

தயாரிப்பு வடிவமைப்பாளர் வங்காளன் செட்டுகளுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டு வர விரிவாக ஆராய்ச்சி செய்து தனது மேம்படுத்தப்பட்ட அனுபவத்தினால் சிறந்த கலைப்படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, லக்கி பாஸ்கரின் பயணத்தை வசீகரிக்கும் பாணியில் படம்பிடித்துள்ளார்.

Related News

9880

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery