சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘உத்தரகாண்டா’ சிறப்பு போஸ்டர்!
Friday July-12 2024

நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகும் ‘உத்தரகாண்டா’ திரைப்படம் இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் ஒன்றாகும். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ், நடராக்சா டாலி தனஞ்சயா, பாவனா மேனன், திகந்த் மஞ்சாலே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

 

கேஆர்ஜி ஸ்டுடியோஸ் பேனரில் கார்த்திக் கவுடா மற்றும் யோகி G ராஜ் தயாரிக்கும் இப்படத்தை,  ரோஹித் பதகி இயக்குகிறார். சாண்டல்வுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பு ’உத்தரகாண்டா’. பிரபல இந்திய பாடகர், இசையமைப்பாளர் அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு அத்வைதா குருமூர்த்தி, கலை இயக்குநராக விஸ்வாஸ் காஷ்யப், படத்தொகுப்பாளராக அனில் அனிருத் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

 

டாக்டர்.சிவராஜ்குமார் தனது ஒவ்வொரு படத்திலும் புதுமையான வழிகளில் புதிய கதாபாத்திர அவதாரங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில், இந்த படத்திலும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

 

இந்த நிலையில், சிவராஜ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு ‘உத்தரகாண்டா’ படத்தில் அவருடைய தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இரத்தக் கறை படிந்த முகத்துடன் சிவன்னாவின் ’மாலிகா’ தோற்றம் ரசிகர்களிடம் பேரார்வத்தை தூண்டியுள்ளது. மேலும், ’மாலிகா’ வேடத்தில் தோன்றும் சிவராஜ்குமாரின் தோற்றம், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Uttarkaanda Poster

 

கேரக்டர்கள் மற்றும் படத்தின் போஸ்டர்களை அறிமுகப்படுத்த உத்தரகாண்டா படக்குழு ஒரு தனித்துவமான வழியை தேர்ந்தெடுத்துள்ளது, அந்த வகையில் இப்போது சிவராஜ்குமாரின் முதல் தோற்றம் எங்கெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது. 

Related News

9884

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery