Latest News :

அழுத்தமான கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்த அறிமுக நடிகர் குல் ரஞ்சித்துக்கு குவியும் பட வாய்ப்புகள்!
Saturday July-13 2024

மலையாளத்தில் இருந்து வரும் நடிகர், நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் மட்டும் அல்ல நிரந்தரமான இடமும் உண்டு. அதற்கு சான்று தற்போது வரை தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, மம்மூட்டி, மோகன்லால் என பலரை சொல்லலாம். இப்போது அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறார் குல் ரஞ்சித்.

 

கேரளாவைச் சேர்ந்த குல் ரஞ்சித் பாடகராக தனது கலைப் பயணத்தை தொடங்கினாலும் தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் இசை ஆல்பம் மற்றும் குறும்படங்களில் நடித்த இவரை, இயக்குநர் அவதார் தமிழ் சினிமா மூலம் நடிகராக அறிமுகப்படுத்துவதற்காக தனது ‘கரா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பாடல்கள் யூடியுபில் வெளியாகி ரசிகர்களிடமும், திரைத்துறையினரிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நடிகர் குல் ரஞ்சித் இடம்பெற்றுள்ள அப்பா - மகள் செண்டிமெண்ட் பாடலான “மகளே...மகளே...” பாடல் கேட்போரையும், பார்ப்போரையும் உருக வைத்துள்ளது.

 

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு அமைந்த ”கண்ணானே கண்ணே...” பாடலுக்கு போட்டியாக அப்பாக்கள் மனதில் இடம்பிடித்துள்ள “மகளே...மகளே...” பாடலில் தந்தையாக நடித்திருக்கும் குல் ரஞ்சித்தின் நடிப்பு மற்றும் உடல்மொழியைப் பார்த்து சிலர் ”அஜித்துக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் களம் இறங்கிய அப்பா”, என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.  

 

 

மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான மறைந்த ராஜாமணியின் மகன் அச்சு ராஜாமணியின் இசையில், ’கே.ஜி.எப்’ படத்தில் அம்மா செண்டிமெண்ட் பாடலை எழுதி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மதுரகவியின் வரிகளில், மலையாள சினிமாவின் முன்னணி பின்னணி பாடகரான கே.எஸ்.ஹரிசங்கர் குரலில் உருவாகியிருக்கும் “மகளே...மகளே...” பாடல் ‘கரா’ படத்திற்கும் மட்டும் அல்லாமல் அறிமுக நடிகர் குல் ரஞ்சித்துக்கும் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது.

 

இந்தியாவின் முதல் மிகப்பெரிய முதலை திரைப்படம் என்ற அடையாளத்தோடு உருவாகும் ஆந்தாலாஜி வகை திரைப்படமான ‘கரா’-வில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்க, லொள்ளு சபா ஜீவா வில்லனாக நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் இதுவரை நடித்திராத சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க, சேலம் வேங்கை கே.ஐயனார் முக்கியமான வேடத்தில் கலக்கியிருக்கிறார். இவர்களுடன் அறிமுக நடிகரான குல் ரஞ்சித் மிக முக்கியமான வேடத்தில் 11 வயது சிறுமிக்கு தந்தையாக நடித்திருக்கிறார்.

 

Actor Gul Ranjith

 

முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கும் குல் ரஞ்சித், தற்போது இயக்குநர் விஜய் விக்னேஷ் இயக்கும் படம் உள்ளிட்ட  இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வரும் குல் ரஞ்சித், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடிப்பார் என்று பாராட்டுவதோடு நின்று விடாமல் தனது அடுத்தப் படத்திலும் அவருக்கு முக்கியமான வாய்ப்பு கொடுத்து அவரது திறமையை ஊக்குவித்திருக்கிறார் இயக்குநர் அவதார்.

 

தாய்மொழி மலையாளம் என்றாலும், நடிப்புக்காக தமிழை கற்றுக்கொண்டு கதாபாத்திரத்தையும், வசனங்களின் ஆழத்தையும் புரிந்துக்கொண்டு நடித்து வரும் குல் ரஞ்சித், தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்ற இடத்தை பிடிப்பதற்காக தான் கடுமையாக உழைக்க தயார், என்பதை சொல்லில் மட்டும் இன்றி செயலிலும் காட்டி வருகிறார். அதனாலயே அவருக்கு தொடர்ந்து பல படங்களின் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

 

Gul Ranjith

 

தனது முதல் படமான ‘கரா’ வெளியீட்டுக்கு முன்பாகவே அடுத்தடுத்த இரண்டு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் குல் ரஞ்சித், மேலும் சில படங்களில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9888

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery