காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உருவெடுத்த சந்தானம் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும், அவை அனைத்தும் காமெடியை அடிப்படையாக கொண்டே இருந்தது. ஆனால், இனி அப்படி இருக்க போவதில்லை. ஆம், சந்தானமும் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடிக்க போகிறார்.
சமீபத்தில் நடந்த நிஜ கலைகலப்பை வைத்து இதை சொல்லவில்லை. சந்தானம் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தை வைத்து தான். இந்த படத்தில் சந்தானம் மாஸ் ஆக்ஷ ஹீரோவாக களம் இறங்குகிறார். காமெடி வேலையை விவேக் பார்த்துக் கொள்கிறார்.
சேதுராமன் இயக்கும் இப்படத்தை விடிவி புரொடக்ஷன்ஸ் சார்பில் கணேஷ் தயாரிக்க, சிம்பு இசையமைத்துள்ளார்.
சிம்புவின் இசையில் இப்படத்தில் ஒரு பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், சமீபத்தில் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜேஷ், ஆர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், “என் குருநாதர் சிம்பு தான். அவர் இல்லை என்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. அவர் வழி நடத்தலாலேயே தான் நான் இந்த இடத்திற்கு வந்தேன். இந்த படத்திற்காக இசையமைக்க அவரிடம் கேட்ட போது, முதலில் கொஞ்சம் யோசித்தவர், பின்னர் சம்மதம் தெரிவித்து, தற்போது பாடல்களுக்கு அருமையாக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
அவரது பிசியான வேலையிலும் எனது படத்திற்கு சிறந்த இசையமைப்பை அவர் வழங்கியுள்ளார். அத்துடன், படத்தின் டிரைலருக்காகவும் அவர் இரவ் பகல் பாறாமல் உழைத்தார். மேலும், படத்தில் எனக்கு மாஸான சில பஞ்ச் வசனங்களையும் அவர் தான் எனக்காக எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் 5 இசையமைப்பாளர்கள் பாடல்களை பாடியுள்ளனர் என்பது படத்திற்கு சிறப்பு. யுவன் இசையில் சிம்பு பாடுவதை கேட்டிருப்போம், சிம்பு இசையும் யுவன் பாடுவதை விரைவில் கேட்போம்.” என்றார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...