ராம் சரண் படத்தில் இணைந்த சிவராஜ்குமார்!
Wednesday July-17 2024

‘உப்பேனா’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக உருவெடுத்திருக்கும் புச்சி பாபு சனா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக ராம் சரண் நடிக்கிறார். ராம் சரணின் 16 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்க, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் பேனரின் கீழ் உயர்தர தொழில்நுட்பத்துடன், மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கிறார்கள்.

 

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக உள்ள பல நடிகர்கள் இணைகிறார்கள். அந்த வகையில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த செய்தி இன்று சிவ ராஜ்குமாரின் பிறந்தநாளின் சிறப்பு சந்தர்ப்பத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ராம்சரண் மற்றும் சிவராஜ்குமார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு சூப்பர் ஸ்டார்களையும் ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

 

அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த பிரம்மாண்ட படத்திற்கு இசையமைக்கிறார், இதில் ராம் சரண் ஜோடியாக ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

 

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

Related News

9891

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery