இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ திரைப்படம் இந்திய ராணுவ வீஅர்களின் தீரம் மிக்க வீரச்செயல்களை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக சார் பல்லவி நடிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்துடன் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷ்னல் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அறிமுக ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவு மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ரொடக்ஷன் டிசைனராக ராஜீவன் பணியாற்ற, கலை இயக்குநராக சேகர் பணியாற்றுகிறார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்ய, துணைத் தயாரிப்பை காட் ப்ளஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கவனிக்கிறது.
காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘அமரன்’ வெளியாகிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...