Latest News :

விஜய் ஆதிராஜ் இயக்கும் ’நொடிக்கு நொடி’ பூஜையுடன் தொடங்கியது!
Friday July-19 2024

தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், 'புத்தகம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார். எண்ணற்ற விளம்பர படங்களை இயக்கியதற்கு பின்னர் திரைப்படத்துறையில் தனது லட்சிய பயணத்தை தொடர்வதற்காக 'நொடிக்கு நொடி' எனும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது.

 

நாக்ஸ் ஸ்டுடியோஸ்' ஆரோக்கியதாஸ் தயாரிப்பில் 'செம்பி' புகழ் அஷ்வின் குமார், ஷியாம் மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜனரஞ்சகம் மிக்க ஆக்ஷன் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகவுள்ளது 'நொடிக்கு நொடி'.

 

திரைப்படம் குறித்து கூறிய விஜய் ஆதிராஜ், ”விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது கனவு 'நொடிக்கு நொடி' மூலம் நனவகிறது. பரபரப்பான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பல ஆச்சரியங்கள் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக அவை வெளியாகும் போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்.

 

அம்ரேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகவும் திறமையான இசைக் கலைஞரான அவரது முழு பரிமாணமும் இப்படத்தில் வெளிப்படும். நான் இயக்கிய 'புத்தகம்' படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று திரையுலகில் முன்னணி எடிட்டராக திகழும் கெவின் 'நொடிக்கு நொடி' திரைப்படத்தின் தொடர்பை கையாளுகிறார். நம்ரிதா, அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் மேகா ராஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.” என்றார்.

 

கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் கலை இயக்குநராக ராமலிங்கம் பணியாற்றுகிறார். ராஜு சுந்தரம் நடனக் காட்சிகளை வடிவமைக்க, தினேஷ் காசி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். 

Related News

9897

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery