5250 நாடக மேடைகளை கடந்து வெற்றிகரமாக கலைப்பணியில் சிறந்து விளங்கும் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும், தமிழக அரசின் கலைமாமணி விருதாளருமான திருவாளர் சிவன் ஶ்ரீனிவாசன் அவர்களின் தொடர் மானுட சேவையை பாராட்டும் வகையில் ஜூலை 14 ஆம் தேதி காரைக்கால் அம்மையார் கோயில் மணி மண்டபத்தில் இரவு 8:00 மணிக்கு நடைபெற்ற 'நேரம் நல்ல நேரம்' நாடகத்தில் இந்த வருடத்திற்கான ’சாஹிப் ஜாதா 2024 சேவைச் செம்மல்’ விருது அதன் தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி அவர்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருது பெற்ற சிவன் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்தும் கவுரவிக்கப்பட்டது. பவுண்டேசன் செயலாளர் எம்.முஹம்மது தாஹா மரைக்காயர், நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் சேக் மிரான் சாஹிப் மற்றும் காரைக்கால் சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது ஆரிப் மீயர் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வில் காரைக்கால் சட்ட மன்ற உறுப்பினர் நாஜிம், கலைமாமணி காரை சுப்பையா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...