Latest News :

இயல்பு நிலைக்கு திரும்பிய பாலா! - மீண்டும் களத்தில் இறங்குகிறார்
Friday July-19 2024

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த  படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  மலையாளத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளவர்.

 

சில நாட்களாகச் சந்தித்து வந்த,தன் உடல் நிலை பிரச்சினைகளில் இருந்து  முற்றிலும் விடுபட்டு மீண்டு விட்டார். அவர்மீது அன்பு கொண்ட ரசிகர்களின் வேண்டுதல்கள் அந்த இறைவனுக்கே கேட்டு விட்டது போலும். ஓராண்டு காலத்திற்குப் பிறகு தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார். மீண்டும் படங்களில் நடிப்பதற்காகக் கதை கேட்கத் தொடங்கி விட்டார்.அப்படிக் கேட்டதில் ஒரு நல்ல கதை அமைந்து இருக்கிறது. விரைவில் நடிக்கவும் இருக்கிறார்.அதற்காக எடுத்த புகைப்படம் தான் இது.

 

தமிழில் புகழ்பெற்ற இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி இவர் என்பதால் தமிழிலும் பட வாய்ப்புகள் வரும் என்று தெரிகிறது..அடுத்து நடிக்க இருக்கும் மலையாளம் மற்றும் தமிழ்ப் பட விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Related News

9900

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery