நானியின் ’சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக, ஒரு அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வாய்ஸ் ஓவரில் தீமையின் சக்தி வலுவடையும்போதெல்லாம், அதைத் தடுக்க அதற்குச் சமமான அல்லது அதைவிட சக்தி வாய்ந்த நல்ல சக்தி உண்டாகும் எனும் ஒரு புதிரான குறிப்புடன் இந்த வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோவில் SJ சூர்யா ஒரு அதிரடியான காவலராக அறிமுகப்படுத்தப்படுகிறார், அவர் அதிகாரமற்ற மக்கள் மீது தனது மேலாதிக்கத்தைக் காட்டுகிறார். இந்த கதையில் நமது பகவான் கிருஷ்ணர் (நானி), தனது சத்யபாமாவுடன் (பிரியங்கா மோகன்), ராவணாசுரனை (SJ சூர்யா) எதிர்கொள்கிறார்.
ஆரம்பம் முதல் இறுதி வரை, பரபர பதட்டத்துடன், வீடியோ ரசிகர்களை முழுவதுமாக கவர்ந்திழுக்கிறது. இது உண்மையில் இரண்டு சக்திவாய்ந்த நபர்களுக்கு இடையிலான போரை காட்டுகிறது. SJ சூர்யா மிரட்டலாக பயமுறுத்தும் அதே நேரத்தில், நானி தனது வலுவான திரைப் ஆளுமையால் பிரமாதப்படுத்துகிறார். இருவரும் தங்கள் ஆற்றல்மிகு நடிப்பால் தீப்பிடிக்க வைக்கிறார்கள்.
விவேக் ஆத்ரேயாவின் தனித்துவமான கதை சொல்லல் நம்மை அசத்துகிறது. நாட் எ டீஸர் எனும் இந்த வீடியோ சொல்லும் கதை மிக சுவாரஸ்யமாக உள்ளது. முரளி ஜியின் ஒளிப்பதிவு கண்களை கொள்ளை கொள்கிறது, அதேசமயம் ஜேக்ஸ் பெஜாய் தனது அழுத்தமான இசைக்கோர்வையில் காட்சிகளை அழகுபடுத்துகிறார். DVV என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பு பிரம்மாண்டத்தின் உச்சமாக அமைந்துள்ளது.
நாட் எ டீஸர் எனும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ, வெகுஜன மக்களை ஈர்க்கும் மாஸ் தன்மையுடன் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் உண்மையான ஆடுபுலி ஆட்டத்தை காண, ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
இந்த பான் இந்தியா ஆக்சன் அதிரடி-சாகச திரைப்படத்திற்கு கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...