இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்க, சத்யராஜ், அரத்குமார், தாலி தனஞ்சயா, முரளி சர்மா, சரன்யா பொன்வண்ணன், ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விஜய் மில்டன் கூறுகையில்“தலைப்பு கதைக்கு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. படம் இன்னும் வெளியாகாததால் நிறைய விஷயங்களை என்னால் இப்போது பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இருக்கும் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும். அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு சிறப்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர். விஜய் ஆண்டனி எப்போதும் இயக்குநர்களின் நடிகர். இந்தப் படம் அவருக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை மெருகேற்றி உங்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.
அச்சு ராஜாமணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி, கே.எல். பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளனர். கலை இயக்குநராக ஆறுசாமி பணியாற்றியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப், பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...