தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘தி ராஜா சாப்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அசத்தலான விண்டேஜ் லுக்கில் இளமை துள்ளலுடன் பிரபாஸ் ஜொலிக்கும் இந்த சிறப்பு வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
'தி ராஜா சாப்' திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ள, க்ளிம்ப்ஸ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விண்டேஜ் காரில் காட்சியளிக்கும் பிரபாஸ், ரொமாண்டிக் ஹாரர் காமெடி மூலம் அனைவரையும் வசீகரிக்க தயாராக இருக்கிறார். மாருதி பிரபாஸை ஸ்டைலான தோற்றத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இது திரைப்பட ஆர்வலர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.
தற்போது, படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் மற்றொரு பிரமாண்ட ஷெட்யூல் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார், ராம் லக்ஷ்மன் மாஸ்டர்ஸ் மற்றும் கிங் சாலமன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். பாகுபலி புகழ் கமலகண்ணன் ஆர்.சி. VFX பணிகளைக் கவனிக்கிறார். மிக சிறப்பான தொழில்நுட்பக் குழு ஒரு புதுமையான, தரமான சினிமா அனுபவத்தை உறுதி செய்கிறது.
மாருதி இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் சார்பில் விஸ்வ பிரசாத் தயாரிக்கும், “தி ராஜா சாப்” திரைப்படம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. குடும்ப பொழுதுபோக்கு படமான ‘பிரதி ரோஜு பாண்டேஜ்’, முதல் தெலுங்கு ஹாரர் காமெடி படமான ‘பிரேம கதா சித்ரம்’ மற்றும் காதல் நகைச்சுவை படமான ‘மஹானுபாவுடு’ போன்ற சூப்பர்ஹிட்கள் மூலம் புகழ் பெற்ற மாருதி, பிரபாஸுடன் இணைந்து, மீண்டும் ஒரு அட்டகாசமான படத்துடன் வருகிறார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...