’பியார் பிரேமா காதல்’, ‘பொன் ஒன்று கண்டேன்’ படங்களை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘ஸ்வீட் ஹார்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கும் இப்படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, கோபிகா ரமேஷ் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்டிருக்கிறார்.
காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் டைட்டிலுக்கான காணொளி பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஜூலை 27ஆம் தேதியன்று சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின் போது, 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் காணொளி வெளியிடப்பட்டதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது.
இந்த காணொளியில் நடிகர் ரியோ ராஜ் - அருணாசலம் - இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியின் ஜாலியான உரையாடல்களும், அது தொடர்பான காட்சிகளும் பார்வையாளர்களிடத்தில் புன்னகையை ஏற்படுத்தி, இன்ப அதிர்ச்சியை அளித்திருப்பதால், இந்த பிரத்யேக காணொளிக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers), டி ஸ்டுடியோஸ் ( D Studios), டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்’ காதல் ரீசெட் ரீப்பிட்’...
ராக்ஸ் நேஞ்சர் எண்டர்டெயின்மெண்ட் (Rocks Nature Entertainment) வழங்கும் ஏ...
யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது...