தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஷ்ணு மஞ்சு, தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் சங்கமான ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன்ஸ்’ (MAA) அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் MAA அமைப்புக்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விஷ்ணு மஞ்சு, திரை பிரபலங்கள் பற்றி சில யூடியுப் சேனல்கள் தவறான மற்றும் அவதூறான செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் யூடியுப் வீடியோ செய்திகள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் திரை பிரபலங்களைப் பற்றிய தவறான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தவர், குறிப்பாக நடிகர், நடிகைகளை அவமரியாதை செய்யும் வகையில் வீடியோக்கள் வெளியிடுவதை இனி பொறுத்துக் கொள்ள முடியாது, என்று தெரிவித்தார்.
விஷ்ணு மஞ்சுவின் இத்தகைய நடவடிக்கைக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டும் இன்றி இந்திய அளவில் பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருவதோடு, அவரை பாராட்டியும் வருகிறார்கள். எந்தவித ஆதாரமும் இன்றி நடிகர், நடிகைகள் பற்றி வெளியாகும் தவறான மற்றும் அவதூறு செய்திகளை தடுப்பதற்கான அவரது முயற்சியை வரவேற்றிருப்பவர்கள், சினிமாத்துறையின் கண்ணியத்தை காப்பாற்றுவதற்கான அவரது அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில், சில சமூக வலைதளம் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களின் அவதூறு செய்திகளுக்கு எதிராக விஷ்ணு மஞ்சு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை மற்றும் அவரது தலைமையின் ஆக்கப்பூர்வமான செயலை சுட்டிக்காட்டி பாராட்டியுள்ள நடிகை மீனா, MAA அமைப்பின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள நடிகை மீனா, “இழிவான யூடியுப் வீடியோக்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை மேற்கொண்ட ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன்ஸ்’ (MAA) மற்றும் அதன் தலைவர் விஷ்ணு மஞ்சு ஆகியோருக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை மீனாவின் இத்தகைய பதிவு திரை பிரபலங்களுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக போராடுவதற்கும், திரைப்பட சமூகத்திற்கு மரியாதைக்குரிய டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்குமான ஒன்றுபட்ட முயற்சியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏ...
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி...
எஸ்.பி.சூரஜ் சார்பில் சுமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னட திரைப்படம் ’45’...