திரைப்பட வரலாற்றில் விக்ரமாதித்தியன் தொடங்கி ’விக்ரம்’, ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களுக்கு அடையாளச் சிறப்பு உண்டு. அவை பெரிய அளவில் வெற்றி பெற்றவை, பேசப்பட்டவை. அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் உருவாகும் திரைப்படம் தான் ’விக்ரம் கே தாஸ்’.
இந்தப் பெயரிலேயே ஒரு கம்பீரம் இருப்பதை உணர முடிகிறது. இப்படத்தை எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் 8 வது திரைப்படமாக 'விக்ரம் கே தாஸ் ' உருவாகவுள்ளது. இப்படத்தில் தொடக்க விழா பூஜை சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு சென்னையில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் கஞ்சர்லா உபேந்திரா கதாநாயகனாக நடிக்கிறார் .இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனனின் உதவியாளர் பாலு பொலிச்சர்லா இயக்குகிறார். பாடல்களை சீர்காழி சிற்பி எழுதுகிறார் .விஜய் ஜெ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார் . கிரேசன் எடிட்டிங் செய்கிறார். பயர் கார்த்திக் சண்டை இயக்குநராகப் பணி புரிகிறார் .தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் மற்ற விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...