பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா தற்போது ‘ஜெர்ஸ்ஸி’ மற்றும் ‘மல்லி ராவா’ படங்கள் புகழ் தேசிய விருது வென்ற இயக்குநர் கெளதம் தின்னுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் தற்காலிகமாக ‘VD 12’ என்று அழைக்கப்படுகிறது.
அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பரவசப்படுத்தும் வகையில், பார்வையாளர்களுக்கு இதற்கு முன் எப்போதும் இல்லாத புதுமையான அனுபவத்தை வழங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடனும், ஆர்வத்துடனும் அயராது உழைத்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் நடைபெற்று வருகிறது. 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால், இந்த திரைப்படத்தை வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியிட பட குழு அறிவித்திருப்பதோடு, படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பை இம்மாதம் வெளியிட முடிவு செய்துள்ளது.
கிரிஷ் கங்காதரன் - ஜோமோன் டி. ஜான் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற கலைஞரான நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரிய தேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...