அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஸ்வீட் ஹார்ட்’. இதில் நாயகிகளாக கோபிகா ரமேஷ் நடிக்கிறார். இவர்களுடன் ரஞ்சி பணிக்கர், ரெடிங் கிங்ஸ்லி, அருணாச்சலம், பெளசி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு இசையமைத்திருப்பதோடு, ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கவும் செய்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிவசங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பின்னணி வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளது. நாயகன் ரியோ ராஜ் தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...