Latest News :

வில்லன் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்ட ‘விடாமுயற்சி’ குழு!
Monday August-12 2024

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்து வருகிறார். இதில் நாயகியாக திரிஷா நடிக்க, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில், ரவி ராகவேந்திரா, சஞ்சய், தஸ்ரதி, ரம்யா, காசிம், ரஷாத் சாஃபராலியேவ், விதாதி ஹசனோவ், துரல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்ய, மிலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

'விடாமுயற்சி' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆரவின் தோற்றத்தை அறிமுகம் செய்யும் விதமாக படக்குழு புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆரவ் வில்லனா? அல்லது நல்லவனா? என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவரை இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

 

இது குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி கூறுகையில், “பல கதைகளுடனும் திருப்பங்களுடனும் வரும் வில்லன் மைக்கேல் நிச்சயம் உங்கள் கவனத்தைக் கவர்வான். 'மைக்கேல்' கதாபாத்திரத்தை நான் உருவாக்கி முடித்ததும், இந்தியத் துறையில் பல பெரிய நடிகர்களின் பெயர்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. ஆனால், ஆரவ்வின் திறமை பக்கம் என் மனம் சாய்ந்தது. 'கலகத்தலைவன்' படத்தின் போதே அவரது அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன். அந்த விஷயம்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்ய வைத்தது. ஆரவ்வின் பெயரை அஜித் சாரிடம் நான் சொன்னபோது, இயக்குநரின் தேர்வில் தலையிடுவதில்லை என்று சொல்லி மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். என்னுடைய சாய்ஸ் சரியானது என்று ஆரவ்வும் நிரூபித்து இருக்கிறார். சில ஷெட்யூல் முடித்த பிறகு அஜித் சாரும் ஆரவ் மீது தன் திருப்தியை வெளிப்படுத்தினார்.” என்றார்.

Related News

9945

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery