Latest News :

நடிகர் என்.டி.ஆர் - இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
Monday August-12 2024

‘கே.ஜி.எப்’, ‘சலார்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் பிரஷாந்த் நீல், தனது அடுத்த படத்திற்காக நடிகர் என்.டி.ஆர் உடன் கைகோர்த்துள்ளார். இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர் நீல்’ என்று அழைக்கப்படுகிறது.

 

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த கூட்டணியின் புதிய படம் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.  இதில் நடிகர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் தங்களது குடும்பத்தினருடன் கலந்துக்கொண்டார்கள்.

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் சார்பில் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கொசராஜு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழாவின் போதே படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 2026 ஆம் ஆண்டு,  ஜனவரி 9 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சலபதி கவனிக்கிறார்.

 

NTR and Prashanth Neel

Related News

9946

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery