Latest News :

இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’!
Friday August-16 2024

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம் திரைப்படம்.

 

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல சாதனைகளை படைத்தது.

 

இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சன் பிக்சர்ஸ் - தனுஷ் கூட்டணிக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் வகையில், 70 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம், ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றிருக்கிறது.

 

இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

இந்த நிலையில், இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. 70-வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில், இத்திரைப்படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடன இயக்கம் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

Actress Nidhya Menon

 

பன்மொழி நடிகையான நித்யா மேனன் தனது தலைசிறந்த நடிப்பின் மூலம் ஏற்கனவே தன்னை நிரூபித்தவர்.  'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை பதிவு செய்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

 

மாபெரும் வெற்றி கூட்டணியான  தனுஷ் மற்றும் அனிருத் இணை நீண்ட நாட்களுக்கு பிறகு இத்திரைப்படத்தில் மீண்டும் சேர்ந்து சிறந்த வெற்றிப் பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தளித்திருந்தனர்.

 

'தாய்க்கிழவி', 'மேகம் கருக்காதா' உட்பட அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. இப்பாடல்களுக்கு நடன இயக்குநர்களாக சதீஷ் கிருஷ்ணன் மற்றும் ஜானி பணியாற்றியிருந்தனர். இவர்கள் இருவருக்கும் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடன இயக்குநர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Sathish and Jony

Related News

9952

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery