ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’கோட்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘கோட்’ படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 (நாளை) வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
இது குறித்து கூறிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, ”ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திரை விருந்து காத்திருக்கிறது. தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி அற்புதங்களை செய்து மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. இதன் ஒரு சிறு பகுதியான டிரைலர் வரும் சனிக்கிழமை அன்று வெளியாகிறது.” என்றார்.
இரட்டை வேடங்களில் தளபதி விஜய் தோன்றும் 'கோட்' விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த திரைப்படமாக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி மற்றும் யோகி பாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் 68வது படமான 'கோட்', அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். தான் ஏற்றிருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்காக கடினமான உழைப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...