இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதில் ரோஷினி பிரகாஷ் மற்றும் ரிதா நாயகிகளாக நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, சாம்.சி.எஸ் பின்னணி இசையமைக்கிறார். கார்த்திக் நேர்த்ஹ்டா பாடல்கள் எழுதியுள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஆர்.பி.நாகு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ‘வணங்கான்' படம் சென்சார் சான்றிதழுக்காக தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...