பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் இளையமகன் இயக்குநர் கலாபிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்திரஜித்’ ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சிகளோடு உருவாகியுள்ளது.
கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அஸ்ரிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்வீர் சிங், சுதன்சூ பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கேதாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
கே.பி என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட ஒரு பாடலும், படத்தின் டிரைலரும் பெரும் கவர்ந்ததோடு, தற்போது ரசிகர்களிடமும் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், சாகச காட்சிகளும் நிறைந்த ‘இந்திரஜித்’ ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தொழில்நுட்ப யுக்தியுடன் எடுக்கப்பட்டிருப்பதை படத்தின் டிரைலரை பார்க்கும் போதே உணர முடிகிறது. அந்த அளவுக்கு காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...