’வெப்பம் குளிர் மழை’ படம் மூலம் கதையின் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட திரவ் தனது FDFS புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கி முதன்மை வேடத்தில் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘டோபமைன் @ 2.22’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான தலைப்பின் மூலம் கவனம் ஈர்க்கும் இப்படம் பற்றி இயக்குநரும், நடிகருமான திரவ் கூறுகையில், “’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களின் உணர்வுகள் மற்றும் ஒரு விஷயத்திற்கு அடிமையாதல் பற்றிய கதையாக இது நகரும். 18-20 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் படமாக்கி முடித்துள்ளோம். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படங்கள் புகழ் நிகிலா ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்- சீசன்3’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் டியூக், யூடியூப் தொடரான, ‘ஷாலினி ஸ்டோர்’ மூலம் நன்கு அறியப்பட்டவர். அவரும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘குற்றம் கடிதல்’ புகழ் சத்யா நடித்துள்ளார். விபிதா, சதீஷ், சாம்சன் மற்றும் ’நூடுல்ஸ் படத்தில் நடித்த மாஸ்டர் சக்திவேலன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் திறமையால் படத்தை சிறந்ததாக உருவாக்கியுள்ளனர். குறிப்பாக, க்ளைமாக்ஸில் இடம்பெறும் பாடல் அனைவரையும் பிரதிபலிக்கும் மற்றும் தொடர்புபடுத்தும் வகையில் கபில் கபிலன் அதை பாடியுள்ளார். படத்தில் இடம்பெறும் ஆங்கிலப் பாடல் ஒன்றை ’கைதி’, ‘லியோ’ புகழ் சரண்யா கோபிநாத் பாடியிருக்கிறார்.” என்றார்.
ஆலன் ஷோஜி படத்திற்கு இசையமைக்க, பிருத்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் பாடல் வரிகளை திரவ் கையாண்டுள்ளார். ஆனந்த் ராமச்சந்திரன் மற்றும் கிஷோர் காமராஜ் ஆகியோர் ஒலிப்பதிவிலும் பப்ளிசிட்டி டிசைனில் தினேஷூம் பணியாற்றியுள்ளனர். சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர் இந்த படத்திற்கான மக்கள் தொடர்பு பணிகளை கவனிக்கின்றனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...