Latest News :

மெல்போர்ன் இந்தியன் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற நித்திலான் சுவாமிநாதன்!
Thursday August-22 2024

’குரங்கு பொம்மை’ புகழ் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி 50 வது திரைப்படமாக கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேலாக வசூலித்து சாதனை படைத்தது.

 

இந்த நிலையில், மெர்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் (Indian Film Festival) ‘மகாராஜா’ படத்திற்காக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்.

 

இந்திய திரையுலகில் மதிப்பு மிக்க இயக்குநர்களான கரண் ஜோஹர், விது வினோத் சோப்ரா, இம்தியாஸ் அலி, கபீர் கான், ராஜ்குமார் ஹிரானி மற்றும் ராகுல் சதாசிவன் ஆகியோரின் படங்களும் இந்தப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

 

இந்த விருது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக நித்திலன் சாமிநாதன் கூறுகையில், “மகிழ்ச்சியில் எனக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. எங்களின் 'மகாராஜா' திரைப்படம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது எங்கள் படக்குழுவுக்கு நெகிழ்ச்சியான தருணம். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய விஜய்சேதுபதி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்த சாதனை சாத்தியமில்லை. இந்த வெற்றிக்கு அடித்தளமிட்ட குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், திரையுலகில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி. இந்த அங்கீகாரத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவின் நடுவர் மன்றத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இதுபோன்ற பாராட்டுகள், எதிர்காலத்தில் மேலும் பல நல்ல படங்கள் இயக்க என்னை ஊக்குவிக்கிறது.” என்றார்.

Related News

9965

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery