ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆக்‌ஷன் ‘விருந்து’ படைக்கப் போகும் ஆக்‌ஷன் கிங்!
Tuesday August-27 2024

நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரீஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விருந்து’. இதில், கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெராடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

கதாநாயகியின் அம்மா, அப்ப மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என விறுவிறுப்பான திரைக்கதை எழுதி, சாகசங்கள் நிறைந்த காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இயக்கியிருக்கிறார் கண்ணன் தாமர கண்ணன்.

 

இப்படத்தின் வசனத்தை பள்ளத் எழுத, ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் இசையமைத்துள்ளனர். வி.டி.ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்ய, சஹாஸ் பாலா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.

 

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியிருந்தாலும் குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியிருக்கும் ‘விருந்து’ வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

9971

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery