’விஸ்வம்பரா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
Tuesday August-27 2024

சிரஞ்சீவி நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ-ஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ’விஸ்வம்பரா’-வின் முதல் பார்வை போஸ்டர் வெளியகியுள்ளது. இதில், மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் பின்னணியில், சிறப்பு சக்திகள் மிகுந்த திரிசூலத்தினை ஏந்தியபடி காட்சியளிக்கிறார் சிரஞ்சீவி. இடி மின்னல் பரவ, தெய்வீக கதிரலை சுற்றிலும் பாய்கிறது. 

 

சிரஞ்சீவி மிக இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் லேசான தாடியுடன் தோற்றமளிக்கிறார், திரிசூலத்தினை கையில் பிடித்தபடி, மிரட்டலான லுக்கில் அசத்துகிறார். இந்த  கண்கவர் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

பிளாக்பஸ்டர் ‘பிம்பிசாரா’ திரைப்படத்தை  வழங்கிய இயக்குநர் வசிஷ்டா, தனது அபிமான நட்சத்திரமான சிரஞ்சீவியுடன் இணைந்து, ’விஸ்வம்பரா’ திரைப்படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்குகிறார். சிறந்த விஎஃப்எக்ஸ், அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான  காட்சிகளுடன் ரசிகர்கள் ஆச்சர்யம் கொள்ளும் வகையில், ஒரு  உலகத்தை உருவாக்கியுள்ளார்.

 

Vishwambhara

 

பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்கேற்க உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் முன்னணி கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர், குணால் கபூர் ஒரு சக்திவாய்ந்த கேரக்டரில் நடிக்கின்றார்.

 

விக்ரம், வம்சி, பிரமோத் ஆகியோர் இணைந்து  பெரும் பொருட்செலவில், இந்த ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வென்சர் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார், பிரபல லென்ஸ்மேன் சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

 

விஸ்வம்பரா 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Related News

9973

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery