தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விஜய், தனது ‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் நடிகை எமி ஜாக்சனை தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாடலான எமி, தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வந்தவர், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தார்.
இந்த நிலையில், நடிகை எமி ஜாக்சன், தனது நீண்ட நாள் காதலரான ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விகை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் இத்தாலி நாட்டில் உள்ள காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இயக்குநர் விஜய் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இது குறித்து இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்து செய்தியில், “அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!.” எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...