“என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும்” - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த யுவன்!
Tuesday August-27 2024

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராஜ யுவன் சங்கர் ராஜா, விஜயின் ‘கோட்’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா இசை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

 

இந்த நிலையில், சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கோட் பட பாடல் தொடர்பாக தனக்கு எதிராக முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

 

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம், உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு "தோல்வியில் இருந்து வெற்றி" அதைப் பற்றித் தான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

 

ஆரம்பத்தில் நான் இசைமயைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை பதித்தனர். அதன்பிறகு நான் தனி அறையில் அமர்ந்து, கதவை பூட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பேன். எங்கு தவறு நடந்தது என்று யோசிப்பேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்க துவங்கினேன். இப்படித் தான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். இதில் உள்ள யோசனை என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும், நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

 

எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது. உங்கள் தலை நிமிர்ந்த படி எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். இதனால் தான் என்னால் இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்து நிற்க முடிகிறது. எனக்கு வரும் கருத்துக்கள், பேச்சுகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால், இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள்.” என்றார்.

Related News

9979

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery