பீட்டாவின் சதியால் முடங்கிப் போன ‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாகுமா இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.
மெர்சல் படத்திற்கான அனுமதி சான்றிதழ் குறித்து இன்று அவசர கூட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டால் மெர்சல் தீபாவளியன்று வெளியாகும். அப்படி கூட்டத்தில் எந்த முடிவு எட்டப்படாமல் போனால், நாளை விடுமுறை நாள் என்பதால், மெர்சல் படத்திற்கு நாளை அனுமதி சான்றிதழ் கிடைக்காது. அனுமதி சான்றிதழ் இல்லை என்றால் படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாது.
இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் முதல் இரண்டு நாட்களுக்கான டிக்கெட்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1200 என டிக்கெட்டிலே அச்சடிக்கப்பட்டு விற்பனையாகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால், தமிழக அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக சினிமா டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்திருந்தார்.
தற்போது ‘மெர்சல்’ படத்தின் டிக்கெட் ரூ.1200-க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், விஷால் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார், என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...