கடனாளியான ’களவாணி’ விமல்! - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Thursday August-29 2024

’பசங்க’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விமல், ‘களவாணி’ படம் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்தவரின் அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

 

இதற்கிடையே, தமிழ் சினிமாவில் தவறவிட்ட தனது இடத்தை மீண்டும் பிடிப்பதற்காக முயற்சித்த நடிகர் விமல், சொந்தமாக படம் தயாரித்து அதில் நாயகனாக நடிக்க முடிவு செய்தார். அதன்படி, இயக்குநர் ஜி.பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நாயகனாக நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தை தானே தயாரிக்கவும் செய்தார். அதற்காக அரசு பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கோபி என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கியதோடு, படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் கடனை திருப்பித் தருவதாக விமல் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை, என்று சொல்லப்படுகிறது.

 

இதனைத்தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடிகர் விமல் மீது கோபி காசோலை வழக்கு தொடர்ந்தார். இதில் இருந்து தப்பிப்பதற்காக கோபி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேல் ஆகியோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை நடிகர் விமல் அளித்தார்.

 

மேலும், நடிகர் விமல் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தயாரிப்பாளர்கள் சங்கம், விமல் மற்றும் கோபி இருவருக்கும் இடையே சமரசம் ஒப்பந்தம் ஏற்பட வழி செய்தது. அதன்படி,  2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.3 கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித்தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

 

ஓராண்டு கடந்தும் பணம் தராததால் 2022-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ரூ.3 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என நடிகர் விமலுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related News

9988

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery