அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்பு, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ல திருநாவுக்கரசர் மீது டெல்லி மேலிடத்திற்கு சில புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரை நியமிக்கும் யோசனையில் ராகுல் காந்தி இருக்கிறாராம். அதே சமயம், திருநாவுக்கரசரும் ராகுலை சந்தித்து பேசியிருக்கிறார்.
அதேபோல், இளங்கோவன், குஷ்பு ஆகியோரும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருக்கும் நிலையில், பா.ஜ.க-வின் தமிழக தலைவராக ஒரு பெண் இருப்பதால், காங்கிரஸும் தமிழக தலைவராக பெண் ஒருவரை தேர்வு செய்யும் முனைப்பில் இருப்பதாகவும், அவர் மக்களிடம் பிரபலமாக உள்ள குஷ்புவாகவே இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பட்டியலில் இளங்கோவன், குஷ்பு, அழகிரி, செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் டெல்லியில் ராகுல் காந்தியை குஷ்பு சந்தித்த போது, அவரிடம் இது குறித்து கேட்டதற்கு, தலைமை எந்த பணி கொடுத்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறேன், என்று அவர் கூறினாராம்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...