இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.அருளானந்து தயாரித்திருக்கும் படம் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’. அறிமுக நடிகர் ஏகன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக சகாய பிரிகிடா நாயகியாக நடித்துள்ளார். இவர்களிடன் யோகி பாபு, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி தினேஷ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ அதற்கு முன்பாக அமெரிக்காவில் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வோர்ல்டு ப்ரீமியர்’ பிரிவில் செப்டம்பர் 18 ஆம் தேதி, இரவு 8:00 மணிக்கு ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ திரையிடப்படுகிறது.
ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் கடந்த 22 வருடங்களில் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...