நடிப்பு மற்றும் இசை என பிஸியாக பயணித்து வரும் ஸ்ருதி ஹாசன், தனது உடற் தகுதியை பராமரிப்பதில் மிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருவதோடு, படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இத்தகைய செயல், அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது.
சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, “எனது தந்தையும், நடிகருமான கமல்ஹாசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்பு கலையைத் தான் பயிற்சி செய்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...