Latest News :

உலக சாதனை முயற்சியாக மேற்கொண்ட யோகா சவால்!

f0255bfb82d1bb66c9f6773f29e401a0.jpg

மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினத்தை முதன்முதலில் முன்மொழிந்தார். அதன்படி, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு ஆன்மீக உடற்தகுதிக்கான யோகா என்ற கருப்பொருளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

 

மனித உடலை இன்பத்திற்கான ஒரு கருவியாக, சாப்பிடவும், தூங்கவும், உடல் இச்சைகள் மற்றும் சாகச விளையாட்டுகளுக்காகவும் மட்டுமே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் சூழலில், யோகா மூலம் உடலை பேரின்பம் பெற திறப்பதற்கும், எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் வகையிலும், ஒற்றுமை யோகா சவால் என்ற உலகளாவிய ஒரு முன்னெடுப்பை ஸ்ரீ பிரீதாஜி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணாஜி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

 

அதன்படி, ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை, உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ஒற்றுமை யோகா சவாலில் பங்கேற்றனர். இந்த ஒற்றுமை யோகா சவாலில், தியானத்தின் அரச பாதையான ராஜ யோகா, மொத்த கவனத்தை செயல்படுத்தும் பகுதியான கர்ம யோகா, ஞானத்தின் அறிவுசார் பாதையான ஞானயோக, அன்பை மையமாகக் கொண்ட பக்தி யோகா மற்றும் இவற்றின் மூலம் மனித உடல் ஒற்றுமையை அனுபவிப்பதற்கான ஹத யோகா என ஐந்து வெவ்வேறு வகையான யோகாக்களை ஸ்ரீ பிரீதாஜி அவர்கள் ஒருங்கிணைத்தார்.

 

Yoga

 

இந்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்தின்  ஆரோக்கிய அமைப்பான ஆயுஷ், இந்த ஒற்றுமை யோகா சவாலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அங்கீகரித்துள்ளது. மேலும் ஒற்றுமை யோகா சவாலில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு உள்ளன.