Latest News :

வழக்கு விசாரணையின் போது பெண்ணுடன் உல்லாசம்! - வழக்கறிஞருக்கு தொழில் செய்ய தடை

2834cd372bcf559a5a01bd80a2236f37.jpg

காணொளி காட்சி விசாரணையின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடைவிதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. பெண்ணுடன் இருந்த வழக்கறிஞரிம் வீடியோவை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க சிபிசிஐடி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கொரோனா தொற்று ஆரம்பித்தபோது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணொளி காட்சி விசாரணை நடந்துவரும் நிலையில், தனி நீதிபதி முன்பான நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் என்பவர் கேமராவை ஆப் செய்யாமல் அருகில் இருந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, சிலர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

 

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு  பரிந்துரைத்ததுடன், வீடியோவை சமூக வலைதளங்களிருந்து நீக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டுள்ளது.

 

Lawyer

 

இதுபோன்ற சம்பவங்களை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை  டிசம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் ஆர்.டி.சந்தானகிருஷ்ணன் தொழில் செய்ய இடைக்காலத் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.